Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு மேக்ரோனிஎன்றால் ரெம்பவும் பிடிக்கும். அதிலும் தென்னிந்திய ஸ்டைலில் செய்யப்படும் மேக்ரோனிஒரு தனிச் சுவை பெற்றது. மாலை நேர ஸ்நாக்ஸ் வகையில் இந்த மக்ரோனிக்கு ஒரு தனி இடம் உண்டு. இதை எப்படி
குழந்தைகளுக்கு மேக்ரோனிஎன்றால் ரெம்பவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ரெசிபி என்றால் இந்த மேக்ரோனிதான். அதிலும் தென்னிந்திய ஸ்டைலில் செய்யப்படும் மேக்ரோனிஒரு தனிச் சுவை பெற்றது. சமையல் கலை வல்லுநரான செஃப் கவுரவ் சதா செய்யும் தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிதனி புகழ்பெற்றதும் கூட.
இந்த ரெசிபியில் முக்கியமாக பயன்படுத்தும் பொருட்கள் கறிவேப்பிலை மற்றும் சாம்பார் பொடி ஆகும். கறிவேப்பிலையின் நறுமணமும் சாம்பார் பொடியின் காரசாரமும் நம்மல சாப்பிட தூண்டாமல் விடாது. கண்டிப்பாக இந்த தென்னிந்திய ஸ்டைல் ரெசிபியை சாப்பிட்ட பிறகு உங்கள் நாக்கில் நீண்ட நாட்களுக்கு அதன் ருசி நீங்காமல் ஓட்டி கொண்டு இருக்கும்.

Recipe By: செஃப் கவுராவ் சதா
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 3 பேர்கள்
-
தண்ணீர்-1 லிட்டர்
உப்பு - தேவைக்கேற்ப
மேக்ரோனி- 2 கப்
வெஜிடபிள் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 10-12
மீடியம் வடிவ வெங்காயம், நறுக்கியது - 1
சிறிய வடிவில் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1-2
பீன்ஸ் (சதுர வடிவில் நறுக்கியது மற்றும் வேக வைத்தது ) - 1/4
சாம்பார் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெஜ் மயோனைஸ் - 5 டேபிள் ஸ்பூன்
-
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பவும்
மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்
அதனுடன் 9 கிராம் உப்பு மற்றும் மேக்ரோனிஇரண்டையும் சேர்க்கவும்
மேக்ரோனிபாக்கெட்டில் கொடுத்துள்ள நேரம் அல்லது 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்
மேக்ரோனிபாத்திரத்தின் அடியில் ஒட்டாத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
ஒரு அகன்ற கரண்டியை எடுத்து 120 மில்லி லிட்டர் பீக்கரில் (கண்ணாடி குடுவை) பாஸ்தாஸ்டோக்கை எடுத்து கொண்டு சமைக்கவும்.
ஒரு வடிகட்டியை கொண்டு சமைத்த பாஸ்தாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
இப்பொழுது அடி ஒட்டாத ஒரு கடாயை எடுத்து கொள்ளவும்
அடி ஒட்டாமல் இருக்க ஸ்பிரே அல்லது எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
நன்றாக வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காலிபிளவர், சாம்பார் மசாலா, கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும்
நன்றாக கிளறி ஒரு நிமிடம் வரை காய்கறிகளை வேக வைக்கவும்
இப்பொழுது இதனுடன் சமைத்த பாஸ்தாஸ்டோக்கை சேர்க்கவும் மற்றும் நன்றாக கிளறவும்
பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சேர்த்து கிளறவும்
மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்
இதனுடன் சமைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறவும்
இப்பொழுது மேக்ரோனிகலவையை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிரெசிபி ரெடி
- நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளையும் சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம்.
- பரிமாறும் அளவு - 1 கப்
- கலோரிகள் - 400 கலோரிகள்
- கொழுப்பு - 32 கிராம்
- கார்போஹைட்ரேட் - 45 கிராம்
- நார்ச்சத்து - 3 கிராம்



Click it and Unblock the Notifications
