சுஹூருக்கு தயாராகும் ஸ்பெஷலான வாட்டிய முட்டை சாண்ட்விச்சும் ப்ரெஷ்ஷான புதினா சட்னி ரெசிபி!!

Written By: Bala Karthik
Subscribe to Boldsky

பெண்கள், தங்களால் முடிந்த அளவிற்கு வாய்க்கு ருசியான, விரிவான உணவை சமைத்து இப்தார் விருந்தாக வைப்பது வழக்கம். சுஹூரின் போது அத்தகைய விருந்தினை ஏற்பாடு செய்ய அவர்களுக்கு நேரமில்லாததால், இப்தாரின் போது கிடைக்கும் மிகுதியான நேரத்தை விருந்துக்கு ஏற்படுத்தி கொள்வார்கள். ஆனால், சுஹூர் என்பது அதிகாலையில் தொடங்குவதால், நமக்கு ப்ரெஷ்ஷான உணவு, விரைவில் கிடைக்காதா என்றே அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர்.

மேலும், இந்த சுஹூரின்போது நாம் சத்தான உணவினை உண்ண வேண்டியதும் அவசியமாகிறது. இதனால், கடினமான விரதத்திற்கு உங்கள் உடல் தயாராகி, நாட்களை எதிர்க்கொள்ள எளிதாகவும் அமைகிறது.

இதனை மனதில் கொண்டு, நாங்கள் இன்று., சிம்பிளான, ருசியான, எளிதான வாட்டிய முட்டை சாண்ட்விச்சை செய்வது எப்படி என சொல்ல போகிறோம். இந்த டிஷ்ஷை, ப்ரெஷ்ஷான புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிட, முட்டையில் இருக்கும் புரத சத்தும், ரொட்டியில் இருக்கும் கார்போஹைட்ரேட்டும், உங்கள் மனதை நிரப்பி, விரதத்திற்கு தயாராகவும் உதவுகிறது. இப்பொழுது செய்முறை விளக்கத்தை நாம் பார்க்கலாம்.

Grilled Omelet Sandwich With Fresh Mint Chutney For Suhoor

பரிமாற தேவையான நபர் - 3

சமைக்க தேவையான நேரம் - 30 நிமிடங்கள்

தயாரிக்க தேவையான நேரம் - 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

புதினா இலைகள் - 2 கையளவு

கொத்துமல்லி தழை - 1 கையளவு

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2 பற்கள்

இஞ்சி - ½ இஞ்ச் பீஸ்

லெமன் ஜூஸ் - 1 டீ ஸ்பூன்

சர்க்கரை - 1 டீ ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - ½ கப்

வாட்டிய முட்டை சாண்ட்விச் செய்ய...

ரொட்டி துண்டுகள் - 3

பாலாடைக்கட்டி (சீஸ்) துண்டுகள் - 2

புதினா சட்னி - 1 டேபிள் ஸ்பூன்

முட்டை - 4

உப்பு - சுவைக்கேற்ப

மிளகு - சுவைக்கேற்ப

Grilled Omelet Sandwich With Fresh Mint Chutney For Suhoor

செய்முறை:

ப்ரெஷ்ஷான புதினா சட்னி செய்ய:

1 உங்களுடைய மிக்ஷர் க்ரைண்டரில் இருந்து சட்னி ஜாடியை எடுத்துகொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால்...ப்ளென்டரை (Blender) கொண்டும் புதினா சட்னியை நாம் தயாரிக்கலாம்.

2 அதன்பின்னர், புதினா சட்னிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஜாடியில் சேர்க்க வேண்டும்.

3 அவை அனைத்தையும் மென்மையான பேஸ்டாக வரும்வரை அரைத்துகொள்ள (அ) கலந்துகொள்ள வேண்டும்.

4 ஒருவேளை, சட்னி மீதமிருந்தால், அதனை சேமித்து மற்ற சிற்றுண்டிகளுக்கு பரிமாறி மகிழலாம்.

5 அந்த சட்னியை இரண்டு நாட்களுக்கு கூட நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Grilled Omelet Sandwich With Fresh Mint Chutney For Suhoor

வாட்டிய முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி:

1 ஒரு பௌலை எடுத்துகொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றிகொள்ளுங்கள். அத்துடன் உப்பு மற்றும் மிளகை சேர்த்து கொள்ளுங்கள். அனைத்தையும் நன்றாக கலக்கி பஞ்சு போன்ற மென்மையானதாக முட்டை கலவையை மாற்றிகொள்ளுங்கள்.

2 இப்பொழுது பொறிப்பதற்கான கடாயை எடுத்துகொள்ளுங்கள். அதன்பிறகு, முழு கரண்டியை கொண்டு அந்த முட்டை கலவையை எடுத்து கடாயில் போட வேண்டும்.

3 கடாயை சாய்த்து, முட்டை எல்லா இடங்களிலும்... கடாயில் பரவுமாறு செய்ய வேண்டும்.

4 முட்டையானது அடிப்பாகத்தில் சமைக்கபட வேண்டியது அவசியம். அவ்வாறு சமைத்த பின்னர், ஆம்லெட்டின் மேலே ரொட்டி துண்டினை வைக்க வேண்டும்.

5 அந்த ஆம்லெட்டின் பக்கங்களை மடித்து, அந்த ரொட்டி துண்டினை கொண்டு எல்லா பக்கங்களிலும் மூட வேண்டும்.

6 மேலும் இரண்டு நிமிடங்களுக்கு சமைத்து, அந்த ரொட்டியை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.

Grilled Omelet Sandwich With Fresh Mint Chutney For Suhoor

7 பாலாடைக்கட்டி துண்டினை ரொட்டிமீது வைக்க வேண்டும். மடிப்புகள் கொண்ட பக்கத்தில் அதனை வைக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

8 அதன்பிறகு, மற்ற இரண்டு ரொட்டி துண்டுகளையும் எடுத்துகொள்ள வேண்டும்.

9 அந்த க்ரீன் சட்னியை, ஸ்பூனால் எடுத்து ரொட்டி முழுவதும் தடவிகொள்ள வேண்டும்.

10 இந்த ரொட்டி துண்டை, முட்டை ஆம்லெட் உள்ள சாண்ட்விச்சுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

Grilled Omelet Sandwich With Fresh Mint Chutney For Suhoor

11 அந்த மூன்று துண்டுகளையும் வாட்டி கொள்ள வேண்டும்.

12 அதனை முக்கோண வடிவத்தில் நறுக்கி, கெட்ச் அப்புடனோ அல்லது புதினா சட்னியுடனோ பரிமாறி மகிழுங்கள்.

13 ரொட்டியை வாட்டுவதற்கு, சாண்ட்விச் மேக்கரை (Sandwich Maker) நாம் உபயோகிக்கலாம்.

அதோடு மற்றுமொரு பரப்பில், காய்கறிகளான தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கேரட் ஆகியவற்றையும் சாண்ட்விச்சுடன் சேர்க்கலாம். இதனால், உங்களுடைய சாண்ட்விச்சானது ருசியாகவும், ஆரோக்கியமாகவும், முழுமையான ஊட்ட சத்துக்களுடனும் கிடைக்கிறது.

வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!

English summary

Grilled Omelet Sandwich With Fresh Mint Chutney For Suhoor

Grilled Omelet Sandwich With Fresh Mint Chutney For Suhoor
Story first published: Tuesday, June 20, 2017, 16:57 [IST]
Subscribe Newsletter