Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க
தண்டை: வட இந்திய ஸ்பெஷல் பானம்
தண்டை என்பது வட இந்திய பானம். பொதுவாக இந்த பானத்தை மகாசிவராத்திரி மற்றும் ஹோலி நாட்களில் செய்வார்கள். மேலும் இந்த பானம் கோடையில் செய்து குடிப்பதற்கு ஏற்ற ஒன்று. இது புத்துணர்ச்சியூட்டும் மிகவும் சிறப்பான பானம்.
சரி, இப்போது அந்த வட இந்திய ஸ்பெஷல் பானமான தண்டை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர் (2 கப்)
சர்க்கரை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
பேஸ்ட் செய்வதற்கு...
பாதாம் - 20
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகு - 10
செய்முறை:
முதலில் பேஸ்ட் செய்ய கொடுத்துள்ள பொருட்களை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குள் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்றி இறக்கி குளிர வைத்து, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு டேபிள் ஸ்பூன் பாலை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின் அதில் இருந்து 1 டீஸ்பூன் குங்குமப்பூ பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள பேஸ்ட் பொருட்களில் இருக்கும் பாதாமின் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை பாலில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் மீதமுள்ள குங்குமப்பூ பாலை ஊற்றி வடிகட்டி, 2 துளிகள் ரோஸ் எசன்ஸ் கலந்து 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், தண்டை ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
