Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பன்னீர் பிரட் பால்ஸ்
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு மாலையில் வித்தியாசமாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய கால்சியம் சத்து கிடைப்பதுடன், குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் டீ/காபி குடிக்கும் நேரத்தில் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சரி, இப்போது அந்த பன்னீர் பிரட் பால்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
பிரட் - 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 1/2
வெங்காயம் - 1
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை 5 நிமிடம் பிசைய வேண்டும்.
பிறகு உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து, பன்னீருடன் சேர்த்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
