Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ரவா சீடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. பலரது வீடுகளிலும் பலகாரங்களை செய்து, கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனுக்கு படைப்பார்கள். அப்படி செய்யும் பலகாரங்களில் ரவா சீடையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்ததாம். மேலும் உங்கள் வீட்டு செல்ல கிருஷ்ணனும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி, இப்போது அந்த ரவா சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
பொட்டுக்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - சிறிது (2 டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பௌலில் ரவை, பொட்டுக்கடலை மாவு, எள், சீரகப் பொடி, மிளகுத் தூள், வதக்கிய தேங்காய், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து அந்த மாவை சீடை அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு பேப்பரில் வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
அதே சமயம் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், அதில் உருட்டி வைத்துள்ள சீடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா சீடை ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications