Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
சுடுவா ரெசிபி
சுடுவா என்பது ஒரு அருமையான மாலை வேளையில் செய்து சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ். இந்த ரெசிபியானது அவல் கொண்டு செய்யக்கூடியது. பொதுவாக இந்த ஸ்நாக்ஸ் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. மேலும் இது எளிதில் செய்யக்கூடியது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸானது மிகவும் பிடிக்கும்.
இங்கு அந்த சுடுவா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
அவல் - 1/4 கிலோ
பொட்டுக்கடலை - 50 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
தேங்காய் துண்டுகள் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு (தட்டியது)
பூண்டு - 2 பற்கள் (தட்டியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அவலைப் போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொட்டுக்கடலை, வேர்க்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்பு அதில் கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, இறுதியில் அவலைப் போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான சுடுவா ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications