Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
சப்பாத்திக்கு சுரைக்காயை வெச்சு இப்படி மசாலா பண்ணுங்க... சூப்பரா இருக்கும்...
Sorakkai Verkadalai Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு வேர்க்கடலை மசாலா செய்யுங்கள்.
இந்த சுரைக்காய் வேர்க்கடலை மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் நன்றாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும் இருக்கும். அதோடு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாகவும் இது செய்யக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் வேர்க்கடலை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் வேர்க்கடலை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/2 கப்
* பூண்டு - 6 பல்
பிற பொருட்கள்...
* சுரைக்காய் - 1 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை மற்றும்
பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து,
பெருங்காயத் தூளையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, பச்சை மிளகாயையும்
சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து
கிளறி, சுரைக்காயையும் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* பிறகு 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
வாணலியை மூடி, குறைவான தீயில் வைத்து, 10-12 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* சுரைக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை
பொடியை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கிளறி இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான சுரைக்காய் வேர்க்கடலை மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
