Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
காரசாரமான மற்றும் சிம்பிளான சோம்பேறி மட்டன் வறுவலை எப்படி செய்வது-ன்னு தெரியுமா?
Somberi Mutton Varuval Recipe In Tamil: விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்க முடியாமல், எந்நேரமும் சமையலறையிலேயே இருக்கிறீர்களா? ஆனால் வாய்க்கு ருசியாக ஏதாவது விரைவில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? இன்று உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியுள்ளீர்களா? அந்த மட்டனை எப்போதும் ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா?
அப்படியானால் அந்த மட்டனைக் கொண்டு சோம்பேறி மட்டன் வறுவலை செய்யுங்கள். இந்த சோம்பேறி மட்டன் வறுவல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, ரசம் சாதம், வெள்ளை சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சோம்பேறித்தனமாக இருக்கும் போது, ஒரு சுவையான மட்டன் ரெசிபியை செய்ய நினைத்தால், இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு சோம்பேறி மட்டன் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோம்பேறி மட்டன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு
ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் மட்டனை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பிசைந்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பிறகு உங்களுக்கு கிரேவியாக வேண்டுமானால், அதற்கேற்ப தண்ணீரை ஊற்றி,
குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, ட்ரையாக வேண்டுமானால், மீண்டும்
குக்கரை அடுப்பில் வைத்து, நீர் வற்றும் வரை வேக வைத்து, மேலே
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சோம்பேறி மட்டன்
வறுவல் தயார்.
Image Courtesy: Poornima's Cook Book



Click it and Unblock the Notifications
