Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
தக்காளி இல்லாம சிக்கனை சமைக்கணுமா? அப்ப சோம்பேறி சிக்கன் வறுவலை செய்யுங்க...
Somberi Chicken Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் அதிகம் சிரமப்படாமல் ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சோம்பேறி சிக்கன் வறுவலை செய்யுங்கள்.
இந்த சோம்பேறி சிக்கன் ரெசிபிக்கு தக்காளி எதுவும் தேவையில்லை. முக்கியமாக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. சிக்கனைக் கழுவி மசாலாக்களைப் போட்டு பிரட்டி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சோம்பேறி சிக்கன் தயார்.

இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்றே கூறலாம். உங்களுக்கு சோம்பேறி சிக்கன் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே சோம்பேறி சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் கழுவிய சிக்கன், பொடியாக நறுக்கிய வெங்காயம்,
இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
மிளகுத் தூள், கரம் மசாலா, கசூரி மெத்தி, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை
சேர்த்து கைகளால் நன்கு பிசைய வேண்டும்.
* பின்பு அந்த வாணலியை அப்படியே அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சிறிது வெண்ணெய்
சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சோம்பேறி சிக்கன் தயார்.
Image Courtesy: pavaniskitchen



Click it and Unblock the Notifications
