Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சிம்பிளான... தக்காளி கொச்சி ரெசிபி!
இரவு நேரத்தில் பலரது வீடுகளில் சப்பாத்தி தான் இரவு உணவாக இருக்கும். உங்கள் வீட்டிலும் இன்று இரவு சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அப்படியானால் தக்காளி கொச்சியை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள்.
தற்போது கொரோனா பெருந்தொற்றால் வெளி கடைகளில் வாங்கி சாப்பிட யோசிக்க வேண்டியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே நம்மை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக தற்போதைய சூழ்நிலையில் கடைகளில் அதிகம் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
இன்று பலரும் வீட்டிலேயே இருந்து அலுவலக வேலை, சமையல் வேலை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்று 24 மணிநேரமும் மிகவும் பிஸியாகவே இருக்கிறோம். வீட்டில் இருந்து அலுவலக வேலையை செய்வதே கடினமான ஒன்று. அதில் பொறுமையாக சமையல் சாப்பிடவா நமக்கு நேரம் இருக்கும். அதிலும் இரவு நேரத்தில் பலரது வீடுகளில் சப்பாத்தி தான் இரவு உணவாக இருக்கும். உங்கள் வீட்டிலும் இன்று இரவு சப்பாத்தி செய்வதாக திட்டமிட்டிருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிப்பவராக இருந்தால், இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும் ஒரு சிம்பிளான சைடு டிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. அது வேறொன்றும் இல்லை, தக்காளி கொச்சி ரெசிபி தான். இந்த தக்காளி கொச்சி செய்வதற்கு 10 நிமிடம் தான் ஆகும். சரி, வாருங்கள் தக்காளி கொச்சியை எப்படி செய்வதென்று காண்போம். குறிப்பாக இது பேச்சுலர்களுக்காக ரெசிபியும் கூட.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தாளிப்பதற்கு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும். அப்படி வதக்கும் போது, சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சீக்கிரம் தக்காளியும், வெங்காயமும் வதங்கும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, ஒரு டம்ளர் நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான தக்காளி கொச்சி ரெடி!



Click it and Unblock the Notifications