Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
மீல் மேக்கரும் பன்னீரும் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல சப்பாத்திக்கு கிரேவி செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Meal Maker Paneer Gravy Recipe In Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? இன்று சற்று ஸ்பெஷலாக, வீட்டில் உள்ளோருக்கு ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் மீல் மேக்கரும், பன்னீரும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவியை செய்யுங்கள். இந்த மீல் மேக்கர் பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 100 கிராம்
* பன்னீர் - 50 கிராம்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* தேங்காய் - 4 பெரிய துண்டுகள்
* முந்திரி - 2-3
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு
கொதித்ததும், மீல் மேக்கரைப் போட்டு, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி,
நீரை வடிகட்டிவிட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம், தக்காளி, முந்திரி, தேங்காய்
மற்றும் சிறிது நீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம்
பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன்பின் அதில் மீல் மேக்கர் மற்றும் பன்னீர் தண்டுகளை சேர்த்து
கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மீல் மேக்கர்
பன்னீர் கிரேவி தயார்.
Image Courtesy: cookpad



Click it and Unblock the Notifications
