Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல இட்லி, தோசைக்கு அட்டகாசமான சட்னியை செய்யலாம்..
Garlic Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதற்கு 10 நிமிடத்தில் ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி தோசைக்கு சட்னியைத் தான் விரும்புவார்களா? அப்படியானால் 4 பொருள் இருந்தால் போதும், அட்டகாசமான சுவையில் பூண்டு சட்னி செய்யலாம்.
பூண்டு சட்னி இட்லி தோசைக்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற சட்னியும் கூட. மேலும் பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், பூண்டுகளை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.

பூண்டு சட்னியை இரண்டு விதத்தில் செய்யலாம். அந்த இரண்டு விதமான பூண்டு சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த இரண்டு விதமான பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1 கப்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 10 பல்
* புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
மற்றொரு பூண்டு சட்னிக்கு....
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1 கப்
* பூண்டு - 6 பல்
* வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு, வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2
நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் சற்று நிறம் மாறும்
வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களான பூண்டு, வரமிளகாய்,
தேங்காய் சேர்த்து, அத்துடன் புளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காய தூள்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பூண்டு
சட்னி தயார்.
மற்றொரு பூண்டு சட்னி செய்வதற்கு...
* இந்த வகை பூண்டு சட்னிக்கு முதலில் மிக்சர் ஜாரில், தேங்காய்,
பூண்டு, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த சட்னியை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான பூண்டு
சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
