Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
நைட் சப்பாத்திக்கு இப்படி முட்டை கிரேவி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Egg Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டை கொண்டு சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்களுக்கு வழக்கமாக செய்யும் முட்டை கிரேவியை செய்ய பிடிக்கவில்லையா?
அப்படியானால் ஒருமுட்டை கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை அரைத்து முட்டை கிரேவி செய்யுங்கள். இந்த முட்டை கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இப்படி கிரேவி செய்யும் போது வீட்டில் உள்ளோர் 2 சப்பாத்தியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த முட்டை கிரேவி செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் 3
* பூண்டு - 15 பல்
* புதினா - 1 கைப்பிடி
* மல்லி - 1 கைப்பிடி
* இஞ்சி - சிறிய துண்டு
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
ப்ரை செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* முட்டை - 6 (வேக வைத்தது)
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி,
புதினா மற்றும் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் வேக வைத்த 6 முட்டைகளை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய்
சூடாவதற்குள் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து,
முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு ப்ரை செய்து ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய
தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சோம்பு தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மிளகுத்
தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம்
கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 5-7 நிமிடம் மூடி
வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் ப்ரை செய்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
