Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு செமயா இருக்கும்...
இன்று கிறிஸ்துமஸ் என்பதால், அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டருக்கும். இப்படி விடுமுறை நாட்கள் வரும் போது தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து நீண்ட நேரம் நிம்மதியாக சாப்பிடலாம்.
நீங்கள் கிறிஸ்துமல் அன்று காலை பூரி, சப்பாத்தி செய்யப் பேகிறீர்களானால், அதற்கு என்ன ஸ்பெஷலாக சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு இப்படி தவா மசாலாவை செய்யுங்கள்.

உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே தவா பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு....
* கெட்டி தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் ஊற
வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி
30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி
சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு
நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நன்கு எண்ணெய் பிரியும்
வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி,
கரம் மசாலாவைத் தூவி, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் வெண்ணெயை சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான தவா பன்னீர் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
