Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
இந்த 5 பொருள் இருந்தா போதும்.. இட்லி தோசைக்கு 5 நிமிஷத்துல சட்னி செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Raw Onion Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை சுட திட்டம் போட்டுருக்கீங்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் தேங்காய், சின்ன வெங்காயம், புளி, வெல்லம், வரமிளகாய் போன்ற பொருட்கள் உள்ளதா? அப்படியானால் இவற்றைக் கொண்டே 5 நிமிடத்தில் சுவையான சட்னியை செய்யலாம். இந்த சட்னி வேலைக்கு செய்வோர் செய்வதற்கு ஏற்ற வகையில் சுபலமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு பச்சை வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 5 நீளத் துண்டுகள்
* பெரிய வெங்காயம் - 4
* காஷ்மீரி மிளகாய் - 4
* புளி - சிறு எலுமிச்சை அளவு
* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், வெங்காயம், காஷ்மீரி மிளகாய்,
புளி மற்றும் வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பச்சை வெங்காய சட்னி
தயார்.
Image Courtesy: aartimadan



Click it and Unblock the Notifications
