Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
ஒரு பெரிய வெங்காயம் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல ஒரு சூப்பரான சட்னியை ரெடி பண்ணலாம்..
Onion Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை தானா? அந்த இட்லி தோசைக்கு எப்பவும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னியை தான் மாத்தி மாத்தி செய்வீங்களா?
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சற்று ருசியான, அதே சமயம் செய்வதற்கு சுலபமாக இருக்கக்கூடிய வகையில் ஒரு சட்னியை செய்து அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த வெங்காய சட்னி அலுவலகம் செல்பவர்கள் விரைவில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 சிறிய துண்டு
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், சேர்த்து
குறைவான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வெங்காய சட்னி
தயார்.
Image Courtesy: indianveggiedelight



Click it and Unblock the Notifications
