Latest Updates
-
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம் -
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்..
வீட்டுல 2 கேரட் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல அட்டகாசமான சுவையில் சட்னியை செய்யலாம்..
Carrot Chutney Recipe In Tamil: இதுவரை கேரட்டை வெச்சு பொரியல், சாம்பார் என்று செஞ்சிருப்பீங்க... ஆனால் அந்த கேரட்டை வெச்சு சட்னி செஞ்சிருக்கீங்களா? இல்லைன்னா, இன்று அந்த கேரட் சட்னியை உங்க வீட்டுல செய்யுங்க. அதுவும் இன்று காலை இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் வீட்டில் கேரட் அதிகமாக உள்ளது என்றால், அந்த கேரட்டைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த சட்னி நிச்சயம் ஒரு வித்தியாசமானதாக இருக்கும். அதே சமயம் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். கேரட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இப்படி கேரட் சட்னி செய்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கேரட் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1 1/2 கப் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி - 1/2 இன்ச் (துண்டுகளாக்கப்பட்டது)
* பூண்டு - 2-3 பல்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1-2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
* பூண்டு - 1-2 பல்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் சீரகத்தை சேர்த்து வறுத்து இறக்கி, ஒருதட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை, உப்பு, மற்றும் மஞ்சள் துதூள்
சேர்த்து மிதமான தீயில் வைத்து, 3-4 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க
வேண்டும். அதன் பின் மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில், வதக்கிய மற்றும் வறுத்த பொருட்களை சேர்த்து
அரைத்து, ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக உப்பு சுவை பார்த்துக்
கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய்,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான கேரட் சட்னி தயார்.
Image Courtesy: indianhealthyrecipes



Click it and Unblock the Notifications











