Latest Updates
-
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கடலை பருப்புடன், இந்த 4 பொருளை சேர்த்து அரைச்சா போதும்.. இட்லி, தோசைக்கு அருமையான சட்னி ரெடி!
Chana Dal Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசை செய்யும் போது, என்ன சட்னி செய்வதென்று யோசிப்பதே பெரிய வேலையாக உள்ளதா? உங்களின் வேலையை குறைக்கத் தான் நாங்கள் தினமும் உங்களுக்காக ஐடியாவைக் கொடுக்கும் வகையில் காலையில் ஒரு சைடு டிஷ் ரெசிபியைப் போடுகிறோம்.
இன்று உங்கள் வீட்டில் செய்யும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்யலாம் என்றால், கடலைப் பருப்பு சட்னியை செய்யுங்கள். இந்த கடலைப் பருப்பு சட்னி, இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபம் மற்றும் குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது.

உங்களுக்கு கடலைப் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 3 பல்
* புளி - 1 துண்டு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து மிதமான தீயில்
வைத்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு
சேர்த்து வதக்கி இறக்கி, அவற்றையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு,
கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வரமிகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள்
வதக்கி இறக்கி சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கடலைப்பருப்பு
சட்னி தயார்.
Image Courtesy: indianveggiedelight



Click it and Unblock the Notifications