Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சைனீஸ் ரெசிபியான சீசுவான் பன்னீர் எப்படி செய்யணும் தெரியுமா?
எப்போதும் பஜ்ஜி, போண்டா செய்து அலுத்துப் போயிருந்தால், வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு இன்று சீசுவான் பன்னீர் செய்யுங்கள்.
குளிர்காலத்தில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது காரமாகவும், சூடாகவும் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். எப்போதும் பஜ்ஜி, போண்டா செய்து அலுத்துப் போயிருந்தால், வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு இன்று சீசுவான் பன்னீர் செய்யுங்கள். இது ஒரு இண்டோ-சைனீஸ் ரெசிபி. இது சீசுவான் சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து, குடைமிளகாய் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சுவையான ஸ்டாட்டர். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது நாண், ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

உங்களுக்கு சீசுவான் பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீசுவான் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/8 டீஸ்பூன்
* சீசுவான் சாஸ் - 1/8 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
* வெள்ளை ஸ்பிரிங் ஆனியன் - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை ஸ்பிரிங் ஆனியன் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு...
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மைதா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - பேஸ்ட் செய்ய தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து, நீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஸ்பிரின் ஆனியனின் வெள்ளை மற்றும் பச்சை பகுதிகளை சேர்த்து, இஞ்சி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் ப்ரை செய்ய வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின் சோள மாவை சிறிது நீரில் கலந்து, அதை வாணலியில் உள்ள சாஸ் உடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான சீசுவான் பன்னீர் தயார்.
குறிப்பு:
* உங்களிடம் சீசுவான் சாஸ் இல்லாவிட்டால், வரமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் சிறிது பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கினால், சீசுவான் சாஸ் தயார்.
* பன்னீரை பேனில் ப்ரை செய்யலாம் அல்லது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் பன்னீர் துண்டுகளைப் போட்டும் ப்ரை செய்யலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications