Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு?
சரவணபவன் ஸ்பெஷல் தேங்காய் சட்னி ரெசிபி..இந்த பொருளை சேர்த்து சட்னி அரைங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்!
Saravana Bhavan Hotel Style Coconut Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு நேர உணவாக இருப்பது இட்லி, தோசைதான். ஆனால் பெரும்பாலும் அவற்றுக்கு ஒரே மாதிரியான சட்னிதான் செய்யப்படுகிறது. திரும்பவும் அதே சட்னியா என வீட்டில் அலுத்து கொள்கிறார்களா? புதிதாக என்ன சட்னி செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சட்னியையே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே இட்லி, தோசைக்கு பெரும்பாலும் செய்யப்படும் எளிதான மற்றும் சுவையான சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். தமிழ்நாட்டின் பிரபல உணவங்களில் ஒன்றான சரவணபவனில் டிபன் வகைகள் மிகவும் பிரபலம் அதைவிட அதற்கு பரிமாறப்படும் சட்னிகள் மிகவும் பிரபலம். நம் வீடுகளில் அரைக்கப்படும் தேங்காய் சட்னி போல அல்லாமல் இந்த தேங்காய் சட்னி வெள்ளை நிறத்தில் இருக்கும். அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் சில பொருட்கள்தான்.

உங்கள் வீட்டில் இன்று இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? ஆம் எனில் இந்த சரவணபவன் ஸ்பெஷல் வெள்ளை நிற தேங்காய் சட்னியை செய்து உங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் அசத்துங்கள். இந்த சட்னியின் கூடுதல் சுவைக்கும், நிறத்திற்கும் காரணமே அதில் சேர்க்கப்படும் முந்திரிப் பருப்புதான்.
உங்களுக்கு சரவணபவன் ஃபேமஸ் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவணபவன் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- துருவிய தேங்காய் - அரை கப்
- பச்சை மிளகாய் - 1
- முந்திரிப் பருப்பு -3
- புளி - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- சமையல் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுந்தபருப்பு - 1/4 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- வர மிளகாய் - 1
செய்முறை:
- முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- பழைய மூடியை விட புதிதாக உடைத்த தேங்காய் மூடியில் சட்னி அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- அதன்பின் தேவைப்பட்டால் சிறிதளவு புளி சேர்த்து மீண்டும் கொஞ்சம் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்,
- பருப்பு நிறம் மாறியதும் அதில் ஒரு வர மிளகாயை உடைத்து போட்டு தாளித்து அடுப்பை அணைத்து விடவும்.
- இதை சட்னி மீது கொட்டி நன்கு கிளறினால் சுவையான சரவணபவன் தேங்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications