Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது தான் பாலக் பன்னீர். இது பன்னீர் மற்றும் பாலக் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான சைடு டிஷ். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது தான் பாலக் பன்னீர். இது பன்னீர் மற்றும் பாலக் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான சைடு டிஷ். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இன்று இரவு சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசனை இருந்தால், இந்த பாலக் பன்னீர் செய்யுங்கள். அதுவும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பாலக் பன்னீர் செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு ஹோட்டலில் சாப்பிட்ட ஒரு அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இப்போது ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாலக் - 4 கப்
* வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 4
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* பிரஷ் க்ரீம் - 1/2 கப்
* உலர்ந்த வெந்தயக் கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் பாலக் கீரையைப் போட்டு 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, கீரையை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து, அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் பன்னீரை வேக வைத்து வெந்ததும், காய்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் தயார்.
குறிப்பு:
* பாலக் கீரையை அதிகமாக வேக வைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அதன் பச்சை நிறம் போய்விடும்.
* கடைகளில் விற்கப்படும் பன்னீரைப் பயன்படுத்துபவராக இருந்தால், அதை சிறு துண்டுகளாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து, பின் பயன்படுத்துங்கள்.
* ஒருவேளை உங்களிடம் க்ரீம் இல்லையென்றால், பாலில் சிறிது சோளமாவு சேர்த்து கலந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பாலக் கீரையை சேர்த்த பின், மூடி வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அதன் நிறம் மாறிவிடும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











