Latest Updates
-
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை! -
கோடை வெயிலுக்கு இதமான வீடு வேண்டுமா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், அதிர்ஷ்டம் தேடி வரும்! -
நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு படி 2026-ல் திவாலாக போகும் நாடுகளும், போரில் சிக்கப் போகும் நாடுகளும் என்னென்ன தெரியுமா? -
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் -
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
சப்பாத்திக்கு காளானை வெச்சு இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்டியா இருக்கும்...
Restaurant Style Mushroom Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வழக்கமாக செய்யும் சைடு டிஷ்ஷை விட, சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சைடு டிஷ் செய்ய நினைத்தால், ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் காளான் கிரேவியை செய்யுங்கள்.
இந்த காளான் கிரேவி சப்பாத்தி, பூரி, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது ஹோட்டலில் கொடுக்கப்படும் க்ரீமியான கிரேவி போன்று இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் காளான் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் காளான் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (பொடி செய்தது)
* மலாய் - 1 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு
பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதல் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு காளானை சேர்த்துநன்கு ளிறி, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி
வைத்து 2 நிமிடம் காளானை வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, முந்திரி பொடி, மலாய், கரம் மசாலா சேர்த்து
கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காளான் கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











