Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
2 வாழைக்காய் வெச்சு ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 1 வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்...
Raw Banana Mixture Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு வழக்கமாக செய்யும் பஜ்ஜியை செய்யாமல், அதைக் கொண்டு மிக்சர் செய்து சாப்பிடுங்கள். இந்த மிக்சர் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ஒருமுறை செய்தால் ஒரு வாரம் வரை கூட வைத்து சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு வாழைக்காய் மிக்சரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் மிக்சர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 2
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மிளகாய் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாழைக்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, கேரட்
துருவியின் உள்ள சற்று பெரிய துளையில் வாழைக்காயைத் துருவிக் கொள்ள
வேண்டும். பின் உடனே அதை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் வாழைக்காயின் நிறம் மாறிவிடும்.
* அதற்கு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் துருவிய வாழைக்காயைத்
தூவி, எண்ணெய் சலசலப்பு அடங்கும் வரை பொரிய விட வேண்டும்.
* பின் ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த மஞ்சள் நீரை 2 டீஸ்பூன் எடுத்து வாணலியில் பொரிந்து
கொண்டிருக்கும் வாழைக்காயில் ஊற்றி கிளறி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மற்றொரு வாழைக்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, அதையும்
துருவி, எண்ணெயில் போட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும், மஞ்சள் நீரை
ஊற்றி கிளறி பொரித்து, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சில்வர் சல்லடையை எடுத்து, அதில் பொட்டுக்கடலை சேர்த்து
பொன்னிறமாக பொரித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே சல்லடையில் வேர்க்கடலை சேர்த்து, அதையும் பொரித்து
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அதில் கறிவேப்பிலை சேர்த்து
பொரித்து, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தில் பொரித்த வாழைக்காயை எடுத்து, அத்துடன்
பொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலை மற்றும் காரத்திற்கு ஏற்ப
மிளகாய் தூள் சேர்த்து கிளறினால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான
வாழைக்காய் மிக்சர் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
