Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன?
1 கப் ரவை வெச்சு.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்...
Rava Snacks Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? வடை, பஜ்ஜி போன்றவற்றை உங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் 1 கப் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு அட்டகாசமான ஸ்நாக்ஸை செய்யுங்கள். இந்த ஸ்நாக்ஸ் 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ரவா ஸ்நாக்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா ஸ்நாக்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் சேர்த்து ஸ்பூன்
கொண்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடேற்றி ஊற்றி, ஸ்பூன்
கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி சற்று தளர்வாக பிசைந்து கொண்டு, 30
நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து, மாவை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து, ஒரு முட்கரண்டியின்
அடிப்பகுதியில் வைத்து பரப்பி அப்படி உருட்டி விட வேண்டும். அப்படி
உருட்டும் போது முட்கரண்டியின் அச்சானது மாவில் விழுந்து, ஒரு அழகான
தோற்றத்தைத் தரும். இதேப் போல் அனைத்து மாவையும் உருட்டி ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை
சேர்த்து, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான ரவா ஸ்நாக்ஸ் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications