Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
1 கப் ரவையும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க..
Rava Puttu Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சூடாக, அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸை செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சத்தானதாகவும், அதே சமயம் சுவையானதாகவும் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு புட்டு பிடிக்குமா? ஆனால் வீட்டில் புட்டு மாவு இல்லையா? கவலை வேண்டாம்.
வீட்டில் 1 கப் ரவையும், 1/4 கப் தேங்காயும் இருந்தால் போதும், ருசியான ரவா புட்டு செய்யலாம். இந்த ரவா புட்டு ஒரு சிறந்த மாலை நேர ஸ்நாக்ஸாக இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ரவா புட்டு 10 நிமிடத்திற்குள் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரவா புட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் ரவையை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* ரவையை நன்கு வறுத்ததும், அதை இறக்கி குளிர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* ரவை நன்கு குளிர்ந்த பின், 1/4 கப் நீரை எடுத்து, அத்துடன் 1/4
டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, புட்டு மாவு பதத்திற்கு
உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3 ஏலக்காயின் விதைகளை மட்டும் தட்டிப் போட
வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை 1/4 கப் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் இட்லி தட்டில் ஒரு துணியை வைத்து, அதன் துணியில் பிசைந்து
வைத்துள்ள ரவையை சேர்த்து மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 5-7
நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் வேக வைத்த புட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் 2
டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை
மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறினால், சுவையான ரவா
புட்டு தயார்.



Click it and Unblock the Notifications
