Latest Updates
-
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்..
Rava Inippu Pidi Kozhukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சத்தான அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கொழுக்கட்டை ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் 1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பிடிக்கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இந்த கொழுக்கட்டை சுவையானது மட்டுமின்றி, ஆவியில் வேக வைப்பதால் சத்தானதும் கூட.

உங்களுக்கு இந்த ரவா இனிப்பு பிடிக்கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா இனிப்பு பிடிக்கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 2 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* நறுக்கிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய 2 டேபிள் ஸ்பூன் தேங்காயை சேர்த்து நன்கு
பொன்னிறமாகும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள நெய்யுடன், ரவையை சேர்த்து, குறைவான தீயில்
வைத்து, 2 நிமிடம் நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து 3 நிமிடம் நன்கு
வறுத்து, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு,
அதில் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியில் வெல்ல நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு
அடுப்பில் வைத்து, வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை
சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி வேக வைக்க வேண்டும்.
* கலவையானது கெட்டியான பின், அதில் வறுத்த தேங்காய், ஏலக்காய் தூள்
மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து கிளறி 2
நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* மாவு நன்கு குளிர்ந்த பின், கையில் நெய்/எண்ணெயை தடவிக் கொண்டு அந்த
மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பிடிக்கொழுக்கட்டை போன்று பிடித்து,
இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான ரவா இனிப்பு பிடிக்கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
