Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
அரிசி மாவு இல்லாம.. வெறும் ஒரு கப் ரவை இருந்தாலே போதும்.. இடியாப்பம் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Rava Idiyappam Recipe In Tamil: இன்று இரவு என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் லைட் ஃபுட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இடியாப்பம் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் இடியாப்பத்தை செய்யுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் இடியாப்ப மாவு இல்லையா? கவலை வேண்டாம்.
உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியென்றால் அந்த ரவையைக் கொண்டு நல்ல சாப்ட்டான இடியாப்பத்தை செய்யுங்கள். இந்த ரவா இடியாப்பம் நன்கு மென்மையாக இருப்பதோடு, நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ரவா இடியாப்பத்தை நாட்டு சர்க்கரையுடனோ அல்லது தேங்காய் பாலுடனோ சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரவா இடியாப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா இடியாப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுக்காத ரவை - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து,
அதில் 1/4 டீஸ்ன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நீரை நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுக்காத ரவையை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* ரவையானது நன்கு சுருண்டு வந்தால், அடுப்பை அணைத்துவிட்டு, மூடி
வைத்து, கை பொறுக்கும் சூட்டிற்கு ஆறியதும், மூடியை திறந்து, கைகளால்
நன்கு பிசைய வேண்டும்.
* பின் பிசைந்ததை இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடியாப்ப உழக்கை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, இடியாப்ப
அச்சை வைத்து, அதனுள் மாவை வைக்க வேண்டும்.
* பிறகு இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக
துருவிய தேங்காயை வைத்து, அதன் மேல் இடியாப்பத்தை பிழிந்து விட
வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நீரை
ஊற்றி மூடி வைத்து, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இட்லி தட்டை வைத்து, மூடி
வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா இடியாப்பம்
தயார்.
* இந்த இடியாப்பத்தை தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக
இருக்கும்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
