Latest Updates
-
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை! -
கோடை வெயிலுக்கு இதமான வீடு வேண்டுமா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், அதிர்ஷ்டம் தேடி வரும்! -
நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு படி 2026-ல் திவாலாக போகும் நாடுகளும், போரில் சிக்கப் போகும் நாடுகளும் என்னென்ன தெரியுமா? -
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்
வீட்டுல 1 கப் ரவை இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்...
Rava Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் பஜ்ஜி, போண்டா என்று சாப்பிட கேட்கிறார்களா? எப்போதும் ஒரே மாதிரியான போண்டா செய்து கொடுப்பீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை ரவையைக் கொண்டு போண்டா செய்யுங்கள். இந்த ரவா போண்டா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ரவா போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா போண்டாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/2 கப்
* தயிர் - 1/2 கப்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ரவை மற்றும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி பேஸ்ட், சில்லி
ப்ளேப்ஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் தயிர்
சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சிறிது
நீரையும் சேர்த்து போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த போண்டா மாவை 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற
வைக்கும் போது ரவை ஊறி உப்பி வரும்.
* அதன் பின் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி அல்லது
ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான ரவா போண்டா தயார்.
* இந்த போண்டாவை அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால் தேங்காய் சட்னி
அல்லது தக்காளி சாஸ் ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு:
* கோதுமை மாவு பயன்படுத்த பிடிக்காவிட்டால், மைதாவை
பயன்படுத்தலாம்.
* எப்போதும் எவ்வளவு ரவையை சேர்க்கிறீர்களோ, அதற்கு பாதி அளவு தயிரை
சேர்க்க வேண்டும்.
* போண்டா மாவானது நீராக இல்லாமல், சற்று கெட்டியாக இருக்க
வேண்டும்.
* மாவை பிசையும் போது, ஒரே திசையில் மாவை கிளறி விட வேண்டும். இதனால்
போண்டாவானது மென்மையாக இருக்கும்.
* போண்டாவை சுடும் போது, எப்போதும் மிதமான தீயில் வைத்து தான் சுட
வேண்டும்.
Image Courtesy: nehascookbook



Click it and Unblock the Notifications









