Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா?
1 கப் ரவை வெச்சு.. ஈவ்னிங் டைம்-ல இப்படி போண்டா செய்யுங்க.. மொறுமொறுன்னு ருசியா இருக்கும்...
Rava Bonda Recipe In Tamil: மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு காபி, டீ குடிக்க கொடுக்கும் போது, அவர்களுக்கு நன்கு மொறுமொறுவென்றும் சூடாகவும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 1 கப் ரவை இருந்தால், உளுந்து வடைக்கு இணையான சுவையைக் கொண்ட ஒரு சூப்பரான ரவா போண்டாவை செய்யலாம். இந்த ரவா போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ரவா போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ரவையை சேர்த்து நன்கு மென்மையாக
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் பச்சரிசி மாவு, வேக வைத்த உருளைக்கிழங்கு, தயிர், 1/4
கப் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதை மூடி
வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய பச்சை
மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு
மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை கையில் எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக
எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
ரவா போண்டா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications