Latest Updates
-
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
Rava Adai With Hotel Style Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? முக்கியமாக உங்கள் பிள்ளைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் ரவையும், காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ரவா அடையும், அதற்கு சைடு டிஷ்ஷாக ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் செய்யுங்கள். இந்த டிபன் காம்போ அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா அடை மற்றும் ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபிய்ன எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்து. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப் அல்லது 150 கிராம்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 20 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பெருங்காயத் தூள் - சிறிது
தேங்காய் சட்னிக்கு...
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* சின்ன வெங்காயம் - 5
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - 2 துண்டு
* பச்சை மிளகாய் - 2
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புதினா - 10 இலைகள்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவையை எடுத்துக் கொண்டு,
அத்துடன் 1/2 கப் தயிரை சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு
கலந்துவிட்டு மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி காய்கறிகளை நன்கு வதக்கி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய தேங்காய்
மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க
வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்த ரவையை கரண்டியால் நன்கு மசித்து கிளறி விட
வேண்டும். ரவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி நன்கு
கலந்து விட வேண்டும்.(அதிக நீரை ஊற்றி விட வேண்டாம். அடைக்கு மாவு
ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்.)
* பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு சிறிது அடை மாவை எடுத்து உருட்டி, ஒரு வாழை இலை அல்லது பால்
கவரில் எண்ணெய் தடவி அதன் மேல் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும், தட்டி வைத்துள்ள அடையை
சேர்த்து, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்தால், சுவையான ரவா அடை தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு, மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சின்ன
வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, புதினா,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், ஹோட்டல் தேங்காய் சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
