Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
மணமணக்கும்... திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை எப்படி செய்யணும் தெரியுமா?
Dindigul Style Chicken Biryani Recipe In Tamil: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் வீடே மணக்கும் அளவில் பிரியாணியை செய்வார்கள். நீங்கள் செய்யும் பிரியாணி எப்போதும் சுவையாகவே இருக்காதா? மேலும் எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் தான் பிரியாணியை செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அருமையான சுவையிலும் இருக்கும். நீங்கள் முதல் முறையாக பிரியாணி செய்பவராயின், இந்த ஸ்டைல் பிரியாணியை முயற்சிக்கலாம். இதனால் வீட்டில் உள்ளோரிடம் நல்ல பெயரை வாங்கலாம்.

உங்களுக்கு திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 200 மிலி
* நெய் - 5 டேபிள் ஸ்பூன்
* சீரக சம்பா அரிசி - 1 கிலோ
* சிக்கன் - 1 கிலோ
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 150 மிலி
* மல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - 1
* தண்ணீர் - 1 1/2 லிட்டர்
பொடி செய்வதற்கு...
* பட்டை - 3 இன்ச்
* கிராம்பு - 12
* கல்பாசி - 5 கிராம்
* ஏலக்காய் - 12
* அன்னாசிப்பூ - 3
* முந்திரி - 20
* பிரியாணி இலை - 3
* ஜாதிக்காய் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 30
* பச்சை மிளகாய் - 7
* பூண்டு - 100 கிராம்
* இஞ்சி - 100 கிராம்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ,
ஏலக்காய், முந்திரி, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடி
செய்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை
மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே
சமயம் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவி,
* பின்பு பிரியாணி செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில்
வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், அரைத்து
வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக ஒரு 3-5 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த பொடியை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் 250 மிலி நீரை ஊற்றி கிளறி ஒரு 5 நிமிடம் மிதமான தீயில்
வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம்
நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று
சேரும் வரை நன்கு கிளறி விட்டு 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் 250 மிலி நீரை சேர்த்து கிளறி, 4 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் தயிர், கொத்தமல்லி, புதினா, உப்பு, எலுமிச்சை சாறு
சேர்த்து கிளறி, 500 மிலி நீரை ஊற்றி நன்கு கிளறி, 15-20 நிமிடம்
மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்படி வேக
வைக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, 250 மிலி நீரை ஊற்றி கிளறி,
கழுவி ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க
வேண்டும். நீரானது நன்கு சுண்டி அரிசி அளவிற்கு வந்ததும், மிதமான
தீயில் வைத்து, பாத்திரத்தை ஒரு தட்டு கொண்டு காற்றுப்புகாதவாறு மூடி
வைத்து, மேலே ஒரு வெயிட்டான பொருளை வைத்து ஒரு 10 நிமிடம் தம் போட்டு
இறக்கி, மேலே 3 டேபிள் ஸ்பூன் நெய், சிறிது புதினா மற்றும்
கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம்
கழித்து பரிமாறினால், சுவையான திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி
தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications
