Latest Updates
-
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது!
1 கப் ராகி மாவு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. பசியும் அடங்கும்.. சத்தானதும் கூட..
Ragi Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியைப் போக்கும் வகையில் ஒரு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு, அட்டகாசமான சுவையில் பணியாரத்தை செய்து கொடுங்கள்.
ராகி மாவில் பணியாரமா என்று கேட்கலாம். ஆம், ராகி மாவுடன், ரவை, அரிசி மாவு சேர்த்து பணியாரம் செய்யும் போது, அது மென்மையாக இருப்பதோடு, சாப்பிட நன்றாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி செய்யும் போது, ராகி சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு ராகி பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வெல்லம் - 1 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு மிக்சர் ஜாரில் 1 கப் ராகி மாவு, 1/2 கப் ரவை
மற்றும் 1/2 கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை 1/2 கப் சேர்த்து, அதோடு 1 கப் பொடித்த
வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மூடி வைத்து 10-15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அதில் 2 சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் நெய்
அல்லது நல்லெண்ணெயை சிறிது ஊற்றி, டம்ளரில் உள்ள மாவை குழிகளில்
ஊற்றி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, பணியாரத்தை திருப்பிப் போட்டு, வேக வைத்து
எடுத்தால், ராகி பணியாரம் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
