Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம்
ராகி மில்க் ஷேக்
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான பானம் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ராகியைக் கொண்டு ஒரு அற்புதமான மில்க் ஷேக் தயாரித்துக் கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான பானம் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உடலுக்கு வலு சேர்க்கும் ராகியைக் கொண்டு ஒரு அற்புதமான மில்க் ஷேக் தயாரித்துக் கொடுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றால் பிடிக்கும். அதிலும் சத்தான ராகியைக் கொண்ட மில்க் ஷேக் செய்து கொடுத்தால், உடலுக்கு இன்னும் நல்லது.

உங்களுக்கு ராகி மில்க் ஷேக் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ராகி மில்க் ஷேக் ரெசிபியின் செய்முறையைப் படித்து செய்யுங்கள். இது நிச்சயம் எளிதாக இருப்பதோடு, உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியை முயற்சித்த பின், எப்படி இருந்தது என்ற உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பால் - 1 1/2 கப்
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் கொக்கோ பவுடரைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை வேக வைக்கவும். ராகி நன்கு வெந்த பின் அதை இறக்கி 15-30 நிமிடம் நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்ஸர் ஜாரில் குளிர்ந்த பால், சர்க்கரை மற்றும் குளிர வைத்துள்ள ராகி கலவை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான ராகி மில்க் ஷேக் தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு கொக்கோ பவுடர் பிடிக்காவிட்டால், வென்னிலா எசன்ஸ் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால், கொக்கோ பவுடர் சேர்த்துக் கொள்வான் மூலம், ராகியின் ப்ளேவரை மறைத்துவிடும். இதனால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
* கொழுப்பு நிறைந்த பாலைப் பயன்படுத்தினால் நல்ல சுவையுடன் இருக்கும்.
* சர்க்கரையை உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
