Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
ருசியான... பஞ்சாபி சமோசா
சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
பொதுவாக பலருக்கு மாலை வேளையில் சமோசா சாப்பிட பிடிக்கும். சிலர் இதற்காகவே மாலையில் கடைக்கு சென்று வாங்கி சாப்பிடுவர். ஆனால் அந்த சமோசாவை செய்யத் தெரிந்தால், வீட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் செய்து சுவைக்கலாம் அல்லவா? உங்களுக்கு பஞ்சாபி சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

கீழே பஞ்சாபி சமோசாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது மற்றும் மசித்தது)
* பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ஓமம், உப்பு, எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தட்டு கொண்டு மூடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் பட்டாணி மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கி குளிர வைக்கவும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். அதே சமயம் உருளைக்கிழங்கு மசாலாவையும் சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
* பின் ஒரு மைதா மாவு உருண்டையை எடுத்து வட்டமாக தேய்த்து, கத்தியால் அரை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
* இப்போது ஒரு அரை வட்ட மைதா மாவை எடுத்து, அதன் முனைகளில் நீரை தடவிக் கொண்டு, பின் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை மைய பகுதியில் வைத்து, சமோசா வடிவில் மடித்துக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் தயாரித்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பஞ்சாபி சமோசா ரெடி!



Click it and Unblock the Notifications
