Latest Updates
-
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அதுவும் சாதத்திற்கும், சப்பாத்தி, பூரிக்கும் பொருத்தமான மட்டன் சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் பஞ்சாபி மட்டன் மசாலா சரியான தேர்வாக இருக்கும்.
இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அதுவும் சாதத்திற்கும், சப்பாத்தி, பூரிக்கும் பொருத்தமான மட்டன் சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் அதற்கு பஞ்சாபி மட்டன் மசாலா சரியான தேர்வாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியின் சிறப்பே குக்கரில் செய்யாமல், கடாயில் செய்வது தான். மேலும் இந்த ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையானதாக இருக்கும்.

இப்போது பஞ்சாபி மட்டன் மசாலா எப்படி செய்வது என்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்களின் கருத்துக்களை மறக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 500 கிராம்
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* வெங்காயம் - 4 (நறுக்கியது)
* இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்
* பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* தக்காளி - 3 (நறுக்கியது)
* ஏலக்காய் - 5
* மிளகு - 8
* பட்டை - 1 துண்டு
* கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பெரிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு சேர்த்து ஒரு நிமிடம் தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு உப்பு சிறிது தூசி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
* வெங்காயத்தின் நிறம் மாறும் போது, அதில் இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கி, மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.
* மசாலா மட்டனுடன் நன்கு சேர்ந்த பின், சற்று புளித்த தயிரை ஊற்றி நன்கு கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்கவும்.
* பின் அதில் நீரை ஊற்றி நன்கு கிளறி, அதில் கொத்தமல்லி இலை மற்றும் கரம் மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து மிதமான தீயில் 25 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பஞ்சாபி மட்டன் மசாலா தயார்.
Image Courtesy: spicyworld



Click it and Unblock the Notifications