Latest Updates
-
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்! -
Breast Cancer Awareness Month: இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? - விளக்கும் டாக்டர்! -
இந்தியாவில் 'தங்கத்தின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? நமக்கு பக்கத்துலதான் இருக்காம் -
குரு அதிசார பெயர்ச்சி 2026: குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்! ஜோதிடர் கணிப்பு! -
பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 14 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கபோகுதாம் -
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
Punjabi Chicken Gravy Recipe In Tamil: இந்த வார ஞாயிற்றுக் கிழமை உங்கள் வீட்டில் காலையில் சப்பாத்தி அல்லது பூரி தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அதற்கு சிக்கனை சைடு டிஷ்ஷாக செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று சிக்கன் கிரேவியை செய்யாமல், ஒருமுறை பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்யுங்கள். சப்பாத்தி, பூரிக்கு இப்படி சிக்கன் கிரேவியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பஞ்சாபி சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 50 மிலி
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 2
* கருப்பு ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஊற வைத்த சிக்கன்
* தண்ணீர் - 100 மிலி
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு, பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், தயிர் மற்றும் சிறிது கொத்தமல்லியை சேர்த்து
பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்யை
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய்,
பிரியாணி இலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு 5-8 நிமிடம் கிளறி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 100 மிலி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1
டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில்
20-30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, சிக்கனை கிளறி, கசூரி மெத்தி
மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பஞ்சாபி
சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
