Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Pudina Pulao Recipe in Tamil: காலை அல்லது மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் அட்டகாசமான சுவையில் ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், கொஞ்சம் புதினாவும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி புதினா புலாவை செய்து பாருங்கள்.

இந்த அட்டகாசமான புதினா புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான புதினா புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகள் காய்கறி சாப்பிடாதவர்கள் என்றால் இந்த ஸ்டைலில் செய்யும் போது அவர்கள் கூட காய்கறிகளை சாப்பிடுவார்கள். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு சுவையான புதினா புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 1 பெரிய வெங்காயம்
- 1 உருளைக்கிழங்கு
- ¼ கப் பட்டாணி
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 10 முந்திரிப் பருப்பு
- 1 ஸ்பூன் நெய்
- தேவையான அளவு உப்பு
அரைக்க வேண்டியவை:
- ½ கப் புதினா இலைகள்
- 4 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 இன்ச் இஞ்சி
தாளிக்க:
- ஒன்றரை ஸ்பூன் எண்ணெய்
- 1 ஏலக்காய்
- 1 கிராம்பு
- ½ துண்டு பட்டை
- 1 பிரியாணி இலை
செய்முறை:
- முதலில், பாஸ்மதி அரிசியை சூடான நீரில் 10 நிமிடங்களோ அல்லது சாதாரண நீரில் 30 நிமிடங்களோ ஊறவைக்கவும்.
- பின் சுத்தம் செய்த புதினா இலைகள், இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவற்றை எலுமிச்சைச் சாறு மற்றும் சிறிதளவு நீருடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு சிறிய பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் பிரியாணி இலையைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வந்ததும், நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- பின்னர், எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- அதன்பிறகு, ஊற வைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் கொதித்ததும் குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் விடவும்.
- இறுதியாக, நெய்யில் வறுத்த முந்திரியைப் புலாவ் உடன் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
