Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
இனி புதினா சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை சேத்துக்கோங்க.. சட்னி சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Pudina Chutney Recipe In Tamil: இன்று காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? அந்த இட்லிக்கு நல்ல டேஸ்ட்டியான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புதினா உள்ளதா? அப்படியானால் அந்த புதினாவைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் இந்த புதினா சட்னி நீங்கள் வழக்கமாக செய்யும் புதினா சட்னியைப் போன்று இருக்காது. மாறாக, இந்த சட்னிக்கு குறைவான பொருட்களே போதும். சொல்லப்போனால் இந்த ஸ்டைலில் புதினா சட்னியை ஹோட்டலில் தான் செய்வார்கள். நீங்கள் இப்படி ஒருமுறை புதினா சட்னியை செய்தால், 2 இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை 1 இட்லி கேட்டு வாங்கி சாப்பிடும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* புதினா - 1/2 கட்டு
* பச்சை மிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 1
* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் புதினாவை சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம்
பச்சை மிளகாயை லேசாக கீறிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து, மிளகாய் வெள்ளை நிறத்தில் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து புதினா இலைகளை சேர்த்து, நன்கு சுருங்கும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அளவாக நீரை ஊற்றி
கிளறிக் கொள்ளவும். இந்த சட்னி சற்று கெட்டியாக இருந்தால் தான் நன்றாக
இருக்கும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான புதினா சட்னி
தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications
