Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க..
இட்லி, தோசைக்கு ஒருமுறை இந்த புரோட்டீன் சட்னியை செஞ்சு பாருங்க.. சுவை சும்மா அள்ளும்...
Protein Chutney Recipe In Tamil: இதுவரை எத்தனையோ சட்னி செய்திருப்பீர்கள். அதுவும் சட்னி என்றதுமே, அதில் வெங்காயம், தக்காளி, தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு தான் சட்னி செய்வோம். ஆனால் இந்த 3 பொருட்களுமே இல்லாமல், வீட்டின் சமையலறையில் உள்ள வேறு சில பொருட்களைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம்.
அதுதான் புரோட்டீன் சட்னி என்று பெயர். இந்த சட்னி வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் பொட்டுக்கடலை ஆகிய புரோட்டீன் நிறைந்த பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய சட்னி என்பதால், இதற்கு புரோட்டீன் சட்னி என்ற பெயர் வந்தது. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட்ட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு புரோட்டீன் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புரோட்டீன் சட்னி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேர்க்கடலை - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* பொட்டுக்கடலை - 1 கப்
* புளி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் பொட்டுக்கடலை
சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான புரோட்டீன் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
