Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
பொட்டுக்கடலையும், தேங்காயும் இருந்தா போதும்... தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்...
Pottukadalai Kuzhambu Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் தோசை தான் சுடப்போகிறீர்களா? அந்த தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ஈஸியான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் பொட்டுக்கடலையும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அதை அரைத்து ஒரு சிம்பிளான குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு தோசையுடன் மட்டுமின்றி, இட்லியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சற்று காரம் குறைவாக இருக்கும்.

இந்த பொட்டுக்கடலை குழம்பை ஒருமுறை செய்தால், உங்கள் குழந்தைகள் அதன் சுவை பிடித்து, அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். உங்களுக்கு பொட்டுக்கடலை குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* வரமிளகாய் - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, தேங்காய், வரமிளகாய்,
சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி
நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூளை தூவி நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு
மற்றும் நீரை சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
