Latest Updates
-
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா?
10 நிமிடத்தில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு முறுக்கு செய்யலாம் தெரியுமா?
Potato Murukku Recipe: விடுமுறையில் இருப்பவதால் வீட்டில் உள்ள பிள்ளைகள் ஏதாவது சாப்பிட கேட்பார்கள். உங்கள் வீட்டிலும் உங்கள் பிள்ளை எப்போதும் ஏதாவது சாப்பிட கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் பிள்ளைகள் முறுக்குகளை விரும்பி சாப்பிடுவார்களா?
அப்படியானால் ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட முறுக்கை செய்து கொடுங்கள். அது தான் உருளைக்கிழங்கு முறுக்கு. உருளைக்கிழங்கின் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே உருளைக்கிழங்கு கொண்டு முறுக்கு செய்து கொடுத்தால், நிச்சயம் அந்த முறுக்கை விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த உருளைக்கிழங்கு முறுக்கு குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த முறுக்கை செய்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு முறுக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 2 கப்
* உருளைக்கிழங்கு - 2
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும்
குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் தோலுரித்த உருளைக்கிழங்கை பிளெண்டரில் போட்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன்
அரிசி மாவு, சீரகம், பெருங்காயத் தூள், வெண்ணெய் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி முறுக்கு மாவு
பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு இடியாப்ப உழக்கை எடுத்து, அதில் முறுக்கு அச்சை வைத்து,
பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து முறுக்கு வடிவில் பிழிய வேண்டும்.
* பின் பிழிந்த முறுக்கை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications