Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
சிம்பிளான... உருளைக்கிழங்கு குருமா
நீங்கள் செய்யும் உருளைக்கிழங்கு குருமா எப்பவுமே ருசியா இருப்பதில்லை? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு உருளைக்கிழங்கு குருமா செய்யுங்கள். இது நிச்சயம் வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெற்று தரும்.
நீங்கள் சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உருளைக்கிழங்கு குருமா செய்யுங்கள். ஆனால் நீங்கள் செய்யும் உருளைக்கிழங்கு குருமா எப்பவுமே ருசியா இருப்பதில்லை? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு உருளைக்கிழங்கு குருமா செய்யுங்கள். இது நிச்சயம் நல்ல சுவையுடன் இருப்பதோடு, உங்கள் வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெற்று தரும். குறிப்பாக இந்த உருளைக்கிழங்கு குருமா குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

இப்போது உருளைக்கிழங்கு குருமாவின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பட்டை - 1/2 இன்ச் துண்டு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 3
* பச்சை மிளகாய் - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
* பூண்டு - 2 பல்
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் உருளைக்கிழங்கின் தோலை உரித்துவிட்டு, துண்டுகளாக்கி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை நீங்கி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, பின் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின் 2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, குறைவான தீயில் ஒரு 10-12 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications