Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
ஒருமுறை உருளைக்கிழங்கு கிரேவியை இந்த மாதிரி செய்யுங்க.. சும்மா அள்ளும்.. அடிக்கடியும் செய்வீங்க...
Potato Gravy Recipe In Tamil: இன்னிக்கு காலையில் உங்க வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதற்கு எப்பவும் சட்னி செஞ்சு போரடிச்சுடுச்சா? அப்படியானால் கிரேவி செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் உருளைக்கிழங்கு கிரேவியை செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு கிரேவி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைலில் உருளைக்கிழங்கு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தயிர் - 1/4 கப்
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, கையால் மசித்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, சீரகம்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பிறகு கெட்டி தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு
கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி 3-4 நிமிடம் நன்கு கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல்
உருளைக்கிழங்கு கிரேவி தயார்.
Image Courtesy: FIST, IIT Patna



Click it and Unblock the Notifications
