Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Cooker Potato Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்யும் கிரேவியைப் போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கை ஊற வைத்து, பின் கிரேவி செய்யுங்கள். இப்படி கிரேவி செய்யும் போது ருசி இன்னும் அற்புதமாக இருக்கும். 1 சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை இன்னொரு சப்பாத்தி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு குக்கர் உருளைக்கிழங்கு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 4 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* புளிப்பில்லாத தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
* கசூரி மெத்தி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை
எடுத்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத்
தூள், கரம் மசாலா, புளிப்பு இல்லாத தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை
தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நன்கு 5 நிமிடம் தக்காளியில்
உள்ள நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து ஊற வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கசூரி மெத்தியை கைகளால்
நசுக்கி சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சுவையான உருளைக்கிழங்கு கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











