Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
2 உருளைக்கிழங்கும், 2 முட்டையும் வெச்சு இப்படியொரு டைம் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Potato Cheese Omelette Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அதுவும் அடிக்குற வெயிலில் எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று கொடுக்காமல், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களான முட்டை மற்றும் உருளைக்கிழங்கைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு புதுமையான ஆம்லெட் செய்து கொடுங்கள். இந்த ஆம்லெட்டை ஒருமுறை செய்து கொடுத்தால் போதும், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். இது ஒரு நல்ல டிபனாக மட்டுமின்றி, டின்னராகவும் இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2
* முட்டை - 2
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி சாஸ் - சிறிது
* சீஸ் - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் 2 சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,
1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் கரம் மசாலாவை
சேர்த்து, சுவைக்கேற்ப சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி
நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு
மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும், கலந்து
வைத்துள்ளதை ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து, பின்
திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் சிறிது தக்காளி சாஸைத் தடவி, துருவிய சீஸை தூவி,
மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு
சீஸ் ஆம்லெட் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
