Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
கசகசாவுடன் இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல சுவையான அல்வாவை செஞ்சிடலாம்.. எப்படின்னு பாருங்க...
Khus Khus Halwa Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர், குறிப்பாக உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஸ்வீட் ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் குழந்தைகளுக்கு அல்வா பிடிக்குமா? அப்படியானால் அல்வா செய்யுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் கசகசா அதிகம் இருந்தால், கசகசா அல்வாவை செய்யுங்கள். இந்த கசகசா அல்வா மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த அல்வா செய்வதற்கு 4-5 பொருட்கள் இருந்தாலே போதும்.

உங்களுக்கு கசகசா அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கசகசா அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கசகசா - 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* நெய் - 1/4 கப்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கசகசாவை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் நீரை
வடிகட்டிவிட்டு, கசகசாவை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரி, உலர் திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில் அரைத்த கசகசாலை எடுத்து, அடுப்பில்
வைத்து, 5-6 நிமிடம் மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரை நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, 4 நிமிடம் நன்கு வேக வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும், முந்திரி, உலர் திராட்சை மற்றும்
ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான கசகசா
அல்வா தயார்.
Image Courtesy:



Click it and Unblock the Notifications
