Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப பூண்டு மோர் குழம்பை 5 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க...
Poondu Mor Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் உங்களுக்கு சமையலறையில் நீண்ட நேரம் சமைக்க பிடிக்கவில்லையா? வீட்டில் தயிரும், பூண்டும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் இந்த குழம்பை 5 நிமிடத்தில் செய்து விடலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பூண்டு மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 20 பல்
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் -1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கெட்டித் தயிர் - 200 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் இடி உரலில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் தட்டிய பூண்டு பற்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு,
அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் தட்டி வைத்துள்ள பூண்டு கலவையை சேர்த்து கிளறி, எண்ணெய்
பிரியும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் 200 மிலி தயிரை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
கட்டிகளின்றி அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த தயிரை வதக்கி வைத்துள்ள பூண்டுடன் சேர்த்து கலந்து, உப்பு
சுவை பார்த்தால், சுவையான பூண்டு மோர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
