Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இட்லிக்கு ஒருமுறை பூண்டு கார சட்னியை இப்படி செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Garlic Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சட்னியை செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அடிக்கடி கார சட்னியை செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் கார சட்னியை செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை இந்த பூண்டு கார சட்னியை செய்து பாருங்கள். இந்த சட்னி நன்கு காரசாரமாகவும், ருசியாகவும் இருக்கும். இப்படி கார சட்னியை செய்தால், 2 இட்லி சாப்பிடுபவர்கள் 1 இட்லியை எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* பூண்டு - 25
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2
* சின்ன வெங்காயம் - 10
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்த்ம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், பூண்டு
சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி, தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூண்டு கார சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications
