Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கிராமத்து ஸ்டைல் பால் பொங்கலும்.. தாளகமும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Pongal 2026: தமிழர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வரப்போகிறது. இந்த பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும் மற்றும் நிலத்தை உழுவதற்கு உதவி புரிந்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்றதுமே நினைவிற்கு வருவது சர்க்கரை பொங்கலும், கரும்பும் தான். இது தவிர இந்த பண்டிகையை முன்னிட்டு, கிராமபுறங்களில் மக்கள் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலை அறுவடை செய்து, தை மாதத்தின் முதல் நாளில் பால் பொங்கலையும், நாட்டு காய்கறிகளை கொண்டு தாளகம் என்னும் ஒரு குழம்பையும் செய்து தயாரித்து சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த தாளகத்தில் 5, 7, 9 என ஒற்றை இலக்க எண்ணிக்கையில் காய்கறிகளை பயன்படுத்துவார்கள்.

ஆனால் தற்போது நகர்புறங்களில் இந்த வழக்கம் குறித்து பலரும் மறந்துவிட்டனர். இந்த பொங்கல் பண்டிகையில் நீங்கள் பாரம்பரியமாக செய்யும் பால் பொங்கலையும், தாளகத்தையும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? தமிழ்நாட்டில் பிரபலமான செஃப் தீனா அவர்கள் கிராமத்து ஸ்டைலில் பால் பொங்கலையும், தாளகத்தையும் எப்படி செய்வதென்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள்:
பால் பொங்கலுக்கு தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 200 கிராம்
* பால் - 100 மிலி
* தண்ணீர் - 100 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
தாளக குழம்புக்கு தேவையான பொருட்கள்:
* மிக்ஸ்டு வெஜிடேபிள் - 1/4 கிலோ (மஞ்சள் பூசணி, கத்திரிக்காய்,
அவரைக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு)
* தேங்காய் - 2 பத்தை
* புளி - மிதமான அளவிலான எலுமிச்சை அளவு
* வெங்காயம் - 2
* தக்காளி - 2
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸபூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக நீரை ஊற்றிவிட
வேண்டாம். தேவையான அளவு மட்டும் நீரை ஊற்றி அரைத்து, வடிகட்டி சாறு
எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் நாட்டுக் காய்கறிகளான மஞ்சள் பூசணி, கத்திரிக்காய்,
அவரைக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்க
வேண்டும்.
* பிறகு ஒரு பித்தளை பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலையை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் குழம்பு மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் காய்கறிகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி நன்கு கிளறி,
காய்கறிகள் ஓரளவு வெந்ததும், பின் மூடி வைத்து, 7-8 நிமிடம்
காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அதில் கெட்டியான புளிச்சாற்றினை சேர்த்து
கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து, கொத்தமல்லி மற்றும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால்,
சுவையான தாளகம் தயார்.
* அடுத்து பச்சரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் நீரை ஊற்றி, 1
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பித்தளை பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 100 மிலி
நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாலை ஊற்றி,
பால் கொதித்து பொங்கி வரும் போது, அதில் ஊற வைத்துள்ள அரிசியை
சேர்த்து சிறிது நேரம் நன்கு கிளறி விட வேண்டும். அரிசியானது ஓரளவு
வெந்ததும், மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து அரிசியை வேக வைக்க
வேண்டும்.
* சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, பின் மூடி வைத்து, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
சாதம் வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால் சுவையான பால் பொங்கல்
தயார்.
எனவே நண்பர்களே! இந்த பொங்கல் பண்டிகை அன்று இந்த பால் பொங்கலையும், தாளகத்தையும் செய்து சுவைத்து மகிழுங்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications