Latest Updates
-
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க பணமழையில் நனையப் போறாங்களாம் -
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க.. -
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
தினமும் ஒரே மாதிரி ரசம் செஞ்சு போரடிக்குதா? இன்னிக்கு பொள்ளாச்சி தேங்காய் பால் ரசம் செய்யுங்க..
Pollachi Thengai Paal Rasam Recipe In Tamil: தினமும் உங்கள் வீட்டில் ரசம் வைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் ரசம் வைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான ரசம் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் தேங்காய் பால் ரசம் செய்யுங்கள். இந்த ரசம் பொள்ளாச்சி பகுதியில் மிகவும் பிரபலமானது.
மேலும் இது மிகவும் சுவையானது மற்றும் செய்வதற்கு சுலபமானதும் கூட. இந்த ரசத்தை சாதத்துடன் சேர்த்து, மேலே அப்பளத்தை நொறுக்கி போட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால், அப்போது இந்த ரசத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்களுக்கு பொள்ளாச்சி தேங்காய் பால் ரசம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொள்ளாச்சி தேங்காய் பால் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த தக்காளி - 2
* புளி - நெல்லிக்காய் அளவு
* நீர் போன்ற தேங்காய் பால் - 2 கப்
* கெட்டி தேங்காய் பால் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு..
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* வரமிளகாய் - 1
* நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு..
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நன்கு கனிந்த தக்காளி மற்றும் புளியை
சேர்த்து, கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள்
தூள், பெருங்காயத் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை
மிளகாய், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரக விழுது, வெங்காயம்
சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கலந்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஊற்றி கிளறி,
மேலே நுரை கட்ட ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். (ரசம்
கொதித்துவிடக்கூடாது)
* இறுதியாக கெட்டி தேங்காய் பாலை ஊற்றி கிளறி, மேலே கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான பொள்ளாச்சி தேங்காய் பால் ரசம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications